முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 6 பேரின் 97.125 மில்லியன் ரூபா பெறுமதியான 16 நிலையான வைப்புகள், ஆயுட்காப்புறுதிப் பத்திரங்கள் ஆகியவற்றை மேலும் 3 மாதங்களுக்கு முடக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று(05) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து, எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி ஏபா வீஹேன, சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, சந்த்ரானி பமாலி ரம்புக்வெல்ல, அமாலி நயனிகா ரம்புக்வெல்ல, இசுரு புலஸ்தி தெஹிதெனிய ஆகியோரின் பெயர்களில் காணப்படும் வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணை செய்யும்போது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது