சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில் இருந்த காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெபிலியான பிரதேசத்தில் சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹேவகே பியதாச டயஸ் என்ற நபர் காவலாளியாக இருந்தார்.
சிறுவர் இல்ல கிணற்றுக்கு அருகில் நேற்று காலை காவலாளியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சிறுவர் இல்லத்தில் உள்ள 17 வயதுடைய பிரதான சந்தேகநபரையும் 16 வயது சிறுவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
80 வயதுடைய கொலை செய்யப்பட்ட சிக்கு ஹெவெகே பியதாச டயஸ் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.