மட்டக்களப்பு மாநகரத்தினில் அமைந்துள்ள ACTIVE TECH NETWORK CAMPUS யினது முதலாவது வருடாந்த பட்டமளிப்பு விழாவானது நேற்று 19-10-2024 வெகு விமர்சையாக நடைபெற்றது.இன் நிகழ்வின் விஷேட அதிதிகளாக திரு.கே.ஹரிஹரராஜ் - பிரதிக் கல்விப் பணிப்பாளர் (வலய மட்டக்களப்பு)
திரு.லிங்கராஜா ஜெகதீசன் - மேலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் (மட்டக்களப்பு)
திருமதி தவத்திருமகள் உதயகுமார் - அதிபர்
வின்சென்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை (மட்டக்களப்பு)
திரு. ஏ.பி. ஜோசப் - அதிபர் புனித மைக்கல் கல்லூரி தேசிய பாடசாலை (மட்டக்களப்பு) மற்றும்
திரு. மனோகரராஜா விக்னராஜ் - principal network reliability engeneer (Microsoft south asian zonal )
ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் ஆரம்பமாக தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது அதனை தொடர்ந்து நாட்டின் மகிமை பாடும் தேசியகீதமும் இசைக்கப்பட்டது. நிகழ்வை மெரூகூட்டும் வகையில் நாட்டிய கலைஞர்களது பரத நாட்டிய நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் திரு. மனோகரராஜா விக்னராஜ் அவரகளது விசேட உரை மூலம் மாணவர்களுக்கு IT துறையில் எவ்வாறு சாதனைகள் புரிய வேண்டும் மற்றும் எதிர்காலம் எதனை நோக்கி இருக்கின்றது என்னபதனையும் தெளிவுப்படுத்தினார். அத்துடன் தங்களது நிறுவனத்திற்கு சுமார் 45 பட்டதாரிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு தருவதாவும் தெரிவித்தார்.
உதவி மேலாளரின் (N.தினேஷ்) வேண்டுதலின்படி தாங்கள் இவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறியதுடன், அதற்கு Campus மேலாளர் உடனடி நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார். இதனடிப்படையில் 20/10/2024 அன்று 35 மாணவர்களின் CVக்கள் Batticalao Sri Lanka Telecom மற்றும் Microsoft நிறுவனம் ஏற்றுக்கொள்வதாகவும் உள்ளது. மேலும் திரு.லிங்கராஜா ஜெகதீசன் அவர்கள் தங்களது Sri lanka telecom நிறுவனத்திட்கு சுமார் 15 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு தருவதாகவும் குறிப்பிட்திருந்தார். இது தொடர்பாக CAMPUS யினது உதவி மேலாரிடம் மாணவர்களது CV களை தங்களிடம் சமற்பிட்குமாறும் மேற்கட்ட நடவடி க்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். வருகை தந்திருந்த மற்றைய அதிதிகளும் தங்கள் பொன்னான கருத்துக்கள் மூலம் மாணவர்களின் சாதனை குறித்தும் எதிர்கால வெற்றி குறித்தும் ஊக்கப்படுத்தினார்கள்.
குறிப்பாக பல்கலைகழக விரிவுரையாளர் திரு. ஹர்ஸான் அவர்கள் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைக்க வேண்டிய நம்பிக்கை தொடர்பான விடயங்கள் பற்றியும் பிள்ளைகள் பெற்றோர்களின் நம்பிக்கைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் மற்றும் network துறையில் புரியக்கூடிய சாதனைகள் குறித்தும் விளக்கமளித்தார்.அடுத்த நிகழ்வாக மாணவர்களின் பட்டமளிப்பு நிகழ்வு அரங்கேரியது. சிறப்பு பெறுபேருகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கலோடு இணைந்து நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கபட்டது. இறுதியாக நன்றியுரையோடு இனிதாக நிகழ்வு முடிவுற்றது.