61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி காங்கேசந்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.