மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகளுக்கான பிரதான சிறுவர் தின நிகழ்வு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

 

 

 




 




வரதன்

 

 

 

 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகளுக்கான பிரதான சிறுவர் தின  நிகழ்வு
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு புதிய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  மாவட்டத்தின் பாடசாலைகளுக்கான பிரதான சிறுவர் தின  நிகழ்வு இன்று மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரின் வழிகாட்டலின் கீழ்  மட்டக்களப்பில் இடம்பெற்றது


புனித மிக்கல் கல்லூரியில் இன்று காலை பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம் எனும் கருத்திட்டத்தின் கீழ் பாடசாலையின் அதிபர் ஏ பி ஜோசப் தலைமையில் இந்த சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது பாடசாலையில் சிறுவர் தின வரவேற்பு பதாகைகள் தொங்கவிடப்பட்டு மாணவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டனர்


அதனைத் தொடர்ந்து அதிபர்  உட்பட பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர் கள்  மாணவச் சிறுவர்களை அன்புடன் வரவேற்று ஆசீர்வாதம் வழங்கி அவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது


 இன்றைய இந்த சிறுவர் தின நிகழ்வில் உப அதிபர்கள் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பாடசாலையின் கனிஷமானவர்கள் என வரும் இன்றைய சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்


 புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  பாடசாலையில் மாணவச் சிறுவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் அவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்க முடியும் எனும் நிகழ்ச்சி திட்டத்தின்கள் இன்றைய சிறுவர் தின நிகழ்வு  கிழக்கு மாகாண பாடசாலைகளில் முன்னெடுக்க ப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்