அனுபவம் இல்லாமல் பாராளுமன்றத்தை நடத்த முடியாது. அதைத் தாண்டி முயற்சித்தால், இலக்குகளை அடைவதில் நீங்கள் தோல்வியடைவீர்கள்- முன்னாள் ஜனாதிபதி

 


பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

"கடந்த இரண்டு வருடங்களாக என்னுடன் பணியாற்றியவர்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட அனுபவம் உள்ளவர்கள், எனவே அவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தில் இருந்தாலும் சரி, இந்த அனுபவம் இல்லாமல் பாராளுமன்றத்தை நடத்த முடியாது. அதைத் தாண்டி முயற்சித்தால், இலக்குகளை அடைவதில் நீங்கள் தோல்வியடைவீர்கள்" என விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.