வரதன்
இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எமது இலக்கு நமது கட்சியின் சின்னமான படகு சின்னம் உச்ச வெற்றியை அடைய வேண்டும் தேர்தல் இறுதி முடிவுகளின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி முதலாவதாக இருக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முதன்மை வேட்பாளருமான சிவ.சந்திரகாந்தன் தெரிவித்தார்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக நிதிகள் மாவட்ட அபிவிருத்தி எமது கட்சியினால் இராஜாங்க அமைச்சராக இருந்தபோது முன்னெடுக்கப்பட்டதாகவும் இதனை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் எனவும் இதனை சிலர் விமர்சனம் செய்வதாகவும் இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எமது இலக்கானது
நமது கட்சியின் சின்னமான படகு சின்னம் உச்ச வெற்றியை அடைய வேண்டும் தேர்தல் இறுதி முடிவுகளின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி முதலாவதாக இருக்க வேண்டும் என்பதே இதற்காக வேட்பாளர்களும் கட்சித் தொண்டர்களும் பணியாற்ற வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முதன்மை வேட்பாளருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் அறிமுகம் இன்று கட்சியின் பொருளாளர் டி தேவராஜன் தலைமையில் இடம் பெற்றது இதன் போது மாவட்டத்தில் போட்டியிடுகின்ற கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன்
கட்சியின் பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம் அவர்களால் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் வேட்பாளர்கள் அறிமுக உரையும் இடம் பெற்றது
வேட்பாளர் தெரிவில் மாவட்டத்தில் கல்வியாளர்கள் சமூக சேவையாளர்கள் தொழில் அதிபர்கள் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் தேர்தல் வேட்பாளராக அறிமுகம் செய்யது வைக்கப்பட்டமை இங்கு விசேட அம்சமாகும்