மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு.



 

 






 

 




 



 

 





(ஏ.எல்.எம்.சபீக்)


 

 

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஊடாக மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும்  மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (14) பி.ப 2.30 மணிக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஊடாக  முன்னெடுத்துச் செல்லப்படும் பொதுமக்களுக்கான சேவைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டதோடு அதனை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தி மாவட்டத்தின் சிறந்த சுகாதார சேவையினை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

அதற்கமைய டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தல், மாவட்டத்தில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழுநோயை கட்டுப்படுத்தல் அது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாவட்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவு அதன் ஊடாக பொதுமக்களுக்கு கிடைக்கும் சேவைகள், வாய்ப் புற்றுநோய் தொடர்பான சேவைகள், மாவட்டத்தில் உள்ள தள வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் என பங்கேற்றிருந்தனர்.