பல கட்சிகள் ஒன்றினைந்து கேட்ட வேட்பாளரை விட தனித்துவமாக போட்டியிட்ட அனுரகுமார அவர்களுக்கு சிங்கள மக்கள் அதிகமான வாக்குகளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் கொடுத்திருந்தார்கள்- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இதய சுத்தியுடன் ஒன்றிணையா விட்டால் மிக பாரதூரமான விளைவுகளை தமிழ் அரசியல் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.
இப்போது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமது அரசியல் என்ற தொனி யில் சென்று கொண்டு இருக்கின்றார்கள் தமிழ் மக்களிடையே பொது வாக நாம் எல்லாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது. இதனை தமிழ் தேசிய கட்சிகள் வெளிப்படை தன்மையுடன் கூறுவ தில்லை. .
இன்று எம்முள் உள்ள கேள்வி நாங்கள் ஒன்றினைய வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு இருக்கும் நிலையில் போட்டியிடுபவர்கள் யார்?. வெளிப் படைத் தன்மையுடன் பொறுப்பு கூற வேண்டும்.என்ற உண்மையை நாங்கள் உணர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்