வரதன்
மட்டக்களப்பில் வியூ அமைப்பின் ஏற்பாட்டில் தேர்தல் கால சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக முறையிடுதல் தொடர்பான தெளிவு படுத்தும் ஊடகவியலாளர்களுக்கான கூட்டம் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம். சுபியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடைபெறவிருக்கும் தேர்தலின் போது கட்சிகள் அரச சொத்துக்களை பயன்படுத்துதல், தேர்தல் சட்டங்களை மீறிய வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக லஞ்சம், ஊழல் மோசடிகளில் ஈடுபடுதல், நீதியான தேர்தல் நடைபெறுவதை தடுத்தல் போன்ற விடயங்களுடன் வாக்காளர்களை தமது தேர்தல் உரிமைகளை பயன்படுத்தி வாக்களிக்க செய்தல் பற்றியும் இதன் போது முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வினால் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு
விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.