வரதன்
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதளுடன் சம்பந்தப்பட்ட வர்களு க்கு தண்டனை வழங்க வேண்டும் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின் றோம் -தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் பு. பிரசாந்தன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் 5 பேரை தெரிவது செய்வதற்காக இம்முறை 392 பேர் போட்டியிடுகின்றனர் எனவே மக்கள் இதில் தெளிவாக இருக்க வேண்டும் எமது கட்சியால் மாத்திரமே கிழக்கு மாகாணத்தை தமிழர்களின் இருப்பை நிலைப்படுத்த முடியும் இதற்காக மக்கள் எங்களுக்கு வேண்டிய ஆதரவினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது
ஏனென்றால் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாலும் அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்பதால் சில போலி முகப்புத்தகங்கள் மூலமும் சில அரசியல்வாதிகளின் கட்டுப்பனங்களை செலுத்தி சுயேச்சை குழுக்களை இறக்கி வேண்டுமென்றே விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதற்கு எடுத்துக்காட்டாக உயிர்த்த ஞாயிறு கொண்டு தாக்குதலை தொடர்பு படுத்தி போலியான குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வருகின்றனர் நமது கட்சியின் தலைவர் உட்பட நாம் தெளிவாக கூறுகின்றோம் இதனை முன்னெடு த்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட வர்களு க்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின் றோம்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நியாயம் கட்டாயம் கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடும் இதில் நாம் தெளிவாக இருக்கின்றோம் எனவே எமது கட்சியின் தலைவர் மக்களுக்கு இதனை தெளிவு படுத்தி வருகின்றார்
எமது கட்சியின் தலைவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு சில அரசியல்வாதிகள் வேண்டுமென்றே குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்குடன் இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் இவற்றை நாம் கண்டிக்கின்றோம்
கடந்த காலங்களில் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் ஆக வந்தவர் தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்காக உன் மீது வேண்டுமென்று இந்த குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர்
மாவட்ட மக்கள் இம்முறை மிகத் தெளிவாக இருக்கின்றனர் இந்த போலி தேசியவாதிகளை நிச்சயம் தோற்கடிக்கப்படுவார் இந்த தேர்தல்களில் மக்கள் இம்முறை தேர்தலில் அரசியல் அதிகாரங்களை எமக்கு வழங்குவார்கள் என 100% நம்பிக்கை எனக்கு உள்ளது என
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் பு. பிரசாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்