இலங்கைக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக கூறுவது போலியான செய்தி.

 


இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை எனவும் அமெரிக்க பிரஜைகளுக்கு அறுகம்பை பகுதிக்கு செல்லும்போது அவதானமாக செயற்படுமாறு மாத்திரமே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க மையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றிய அவர், இலங்கைக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக கூறுவது போலியான செய்தி என தெரிவித்தார்.