கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர மட்டக்களப்பு விஜயம்

 


 























மட்டக்களப்பு  மாவட்டத்தின் எய்ட்ஸ்  பாலியல் நோய் கட்டுப்பாட்டுப்பிரிவு வைத்திய அதிகாரி T.திவாகர் மற்றும் தேசிய எய்ட்ஸ் பாலியல் நோய் கட்டுப்பட்டு பிரிவு  பணிப்பாளர் வைத்தியர் வித்யா குமார பெலி ஆகியோரின்   வழிநடத்தலில் பாதுகாப்பான பாலியல் எனும் தொனிப்பொருளில் குழுக்கூட்டம் ஒன்று   மட்டக்களப்பு   பிராந்திய சேவைகள் பணிமனையில்  இடம் பெற்றது .

 கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர்  ஜெயந்தலால் ரத்ன சேகர பிரதான அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் .

 விசேட அதிதியாக  மாகாண சேவைகள் பணிப்பாளர் கொஸ்தா கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  R.  முரளிதரன்   தலைமையில் இடம் பெற்ற  செயலமர்வில் கிழக்கு மாகாணத்தில்  உள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவு கலந்து கொண்டது ..

 இக் கூட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் ,நகரங்கள் கிராமங்கள் ஆகியவற்றில் நேரடியாக பங்கெடுக்கும் தலைவர்கள் , வைத்திய அதிகாரிகள் , திணைக்கள உத்தியோகத்தர்கள்  , பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .