ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்துவிட்டது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அதில் அதிகாரத்தை பெற்றதன் பின்னர், புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு, மக்களின் ஆணையுடன் நிறைவேற்றப்படும். அதில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சரவையும் அமைச்சரவை பேச்சாளருமான விஜத ஹேரத் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு மக்களிடம் கொண்டுசெல்லப்படும். மக்களின் ஆணையுடன் நிறைவேற்றப்படும் என்றார். இதேவேளை, ஒக்டோபர் 2ஆம் திகதியன்று வருதரவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படவிருக்கும் பேச்சுவார்த்தை தொடர்பில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், முதலாவதாக (30.09.2024) அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தீர்மானங்கள் எடுக்கவில்லை என்றார்.
அரசியல் பலம் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட
தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை
எடுத்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசியல் நியமனம் பெற்றவர்களின் பதவிகள் மீள
பெறப்படும் என அவர் கூறினார்."எம்.பி.க்களின் பல மகன்கள் மற்றும்
மகள்களுக்கு இராஜதந்திர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன," என்று அவர்
கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கை இராஜதந்திரிகள் எவரும் உடனடியாக மீள அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.