மட்டக்களப்பு இலுப்பட்டிச் சேனையில் கன்னித்தீவு வீதி பிரதேசத்துக்குள் நேற்று நள்ளிரவு நுழைந்த காட்டுயானைகள் மகேஸ்வரன் ஸ்ரீதரன் என்பவரின் வீட்டையும் உடைமைகளையும் சேதமாக்கியுள்ளன .
வீட்டினர் உறங்கி கொண்டிருந்த நள்ளிரவு வேளை யானைகள் நுழைந்துள்ளன.
சம்பவம் நடைபெற்ற வேளை வீட்டினர் பின் புறவழியாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது .10க்கு மேற்பட்ட விதை நெல்மூடைகளை முற்றாக சேதமாகியதோடு உண்டுவிட்டும் யானைகள் சென்றுள்ளன
இது சம்பந்தமாக பிரதேச கிராம சேவையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது