வரதன்
நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்ற ஒரு தேர்தலாக அமையப் போகின்றது எமது கட்சியின் தலைவர் இத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நீதியான நேர்மையான ஊழலற்ற ஒரு ஆட்சியை அமைக்கப் போகின்றது நிச்சயம் என முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றி மனப்பாங்குடன் இந்தத் தேர்தலில் பெரும் நம்பிக்கையுடன் களம் இறங்கி உள்ளோம்.
இடம்பெற உள்ள தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தை மட்டுமில்லாமல் இலங்கை நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்ற ஒரு தேர்தலாக அமையப் போகின்றது எமது கட்சியின் தலைவர் இத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கப் போகின்றது நிச்சயம் எனவே
நாட்டில் உள்ள மக்கள் இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நீதியான நேர்மையான ஊழலற்ற ஒரு ஆட்சியை அமைப்பதற்கு மாவட்ட த்திலேயே 2 ஆசனங்களை நிச்சயமாக பெறுவோம் அதேவேளை இலங்கை முழுவதும் வருகின்ற முடிவுகளில் எமது கட்சி ஆட்சி அமைக்க கூடிய வகையில் வெற்றி பெறும் என
முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊட சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்