உகண்டா , சீசல்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் நாம் மறைத்து வைத்ததாக கூறிய பணத்தை நாட்டிற்கு கொண்டு வரவும் - நாமல் ராஜபக்‌ஷ

 


உகண்டா , சீசல்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் நாம் மறைத்து வைத்ததாக கூறிய பணத்தை நாட்டிற்கு கொண்டு வரவும் என நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் வலியுருத்தியுள்ளார்.

எமது நாட்டின் பணத்தை உகண்டாவுக்கு கொண்டு சென்றதாக தேசிய மக்கள் சக்தி பெண் சட்டத்தரணி ஒருவர் கூறிய விடயம் சமூக வலைகளில் சென்றது.தற்போது அந்த சட்டத்தரணி குறித்த விடயத்தை மாற்றி கூறுகிறார் என்ற விடயம் செல்கிறது. நாம் ஜனாதிபதியிடம் வினயமாக கேட்பது உகண்டா பணம் தொடர்பி  விசாரணை நடத்தவும் . அனுர குமார திஸாநாயக நாம் சீசல்சில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கூறினார் அது தொடர்பில் விசாரணை நடத்தவும். நாம் குற்றவாளி என்றால் சிறையில் அடைக்கவும் இல்லையென்றால் பொய் கூறியதாக மக்களிடம் சொல்லவும் என அவர் கூறினார்.