freelancer
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான சாலையை உடனடியாக இட மாற்றக் கோரி பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் . பிரதேச வாழ் இளைஞர்களால் சவப்பெட்டி ஒன்று ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு "மது ஒழிப்பு வேண்டாம் மது அழிப்பே வேண்டும்' என கோஷமிட்டனர் .
சமயத் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் .
மதுபான இலாகாவின் சட்டத்தின்படி ஒரு மதுபான சாலைக்கும் இன்னொரு மதுபான சாலைக்கும் 500-மீட்டர் மேல் இடைவெளி இருக்கவேண்டும் , இந்த மதுபான சாலை ஏற்கனவே நீண்ட காலமாக இயங்கி வரும் ஒரு மதுசாலைக்கு மிக அருகில் அதாவது 400-மீட்டர் இடைவெளிக்குள் அமைக்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர் .
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த வேளை , பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் ஆர்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்டறிந்து மேலிடத்து உத்தரவுக்கு அமைய மறு அறிவித்தல்வரை மதுபானசாலையை மூடுமாறு பணிப்புரை வழங்கினார் .