பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர் .

 

எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக எட்டு சர்வதேச நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியு
ள்ளது.

இந்த சர்வதேச கண்காணிப்புக் குழுக்களில் ரஷ்யா, பொதுநலவாய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.