இலங்கையில் உள்ள சில கரையோர சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

 


 

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற வாய்ப்பு உள்ளதன் காரணமாக, சில சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபையை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அருகம்பே மற்றும் கரையோரப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, பயங்கரவாத அச்சுறுத்தல் சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை குறிப்பாக இதில் உள்ள ஆபத்தின் தன்மையை குறிப்பிடவில்லை. ஆனால் இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.