அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று பஸ் தரிப்பிடத்தில் இருந்து  மீட்கப்பட்டுள்ளது

 


 

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று இன்று (17) காலை  மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்தினுள் ஒருவர் இறந்து தரையில் கிடப்பதாக நுவரெலியா மாநகர சபை ஊழியர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரும் அவருடன் இன்னுமொரு பெண்ணும் கடந்த 5 நாட்களுக்கு முன்பிலிருந்து நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் யாசகம் பெற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அதிக குளிர் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.