ஏரியில் தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் .

 


 

நீரில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (04) பிற்பகல் இந்த பெண் கும்புக்கெடே பகுதியில் உள்ள புவக்வெல்ல ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கொகருல்ல பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புவக்வெல்ல ஏரியில் தாமரை மலர் பறிக்கச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.