ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் படுகொலை லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை உட்பட முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகளையும் தீவிரப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அத்துடன்,இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஸ் ஸ்காப்டரின் மரணம்,வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டலிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டமை குறித்தும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
பதில்பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.