அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகளுக்கு இன்றைய தினம் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 


இலங்கையில் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகள்  இன்றைய  தினம்  (15) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல் ரத்நாயக்க இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.