சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது?

 


தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரை விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஒரு சிறிய தேங்காய் ரூ.120 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர்.

மேலும், கொழும்பை சுற்றியுள்ள சில பகுதிகளில் இளநீர் 160 முதல் 200 ரூபா வரை விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேங்காய் விலை உயர்விற்கு மத்தியில் சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு தேங்காய் மொத்த விலையில் 80 முதல் 100 ரூபா வரை விற்பனை செய்வதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.