குறித்த சம்பவமானது ஸ்காபரோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 54 வயதுடைய துஷி லக்ஷ்மணன் என்ற பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 50 வயதான ராகுலன் லக்ஷ்மணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கொலைக்கான காரணம் வெளியாகவில்லையெனவும் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.