மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஜனநாயகப் பங்குதாரர்களுக்கான தொடர் கலந்துரையாடலானது இன்று செங்கலடி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலானது செங்கலடி பிரதேச சபை செயலாளர் திரு வி.பற்குணன் தலைமையில் இடம்பெற்றதுடன் ,
AHRC நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் நூ.இஸ்மியா, கள இணைப்பாளர் ப.சிரோஜன், சிவில் சமூக பிரதிநிதிகள், இளைஞர்கள் , பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என 30 பிரதிநிதிகள் பங்குபற்றுதலுடன் குறித்த நிகழ்வானது இடம்பெற்றது.
இதில் பங்குபெற்றுனர்கள் தங்கள் கிராமங்களின் நலன்கருதி தங்களது மக்களது பிரச்சனைளான வீதி , குப்பை பிரச்சினை , மின்விளக்கின்மை, காட்டு யானைபிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்ததுடன் அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான பல உடனடி தீர்வுகளும் பிரதேச சபை செயலாளரால் வளங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.