தமிழரசு கட்சியினரை ஆதரிக்கும் மக்களும் இம் முறை ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முதன்மை வேட்பாளருமான சி. சந்திரகாந்தன்

 

 

வரதன்

 

 

      அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் தெட்ட   தெளிவாக உள்ளனர்,   தமிழரசு கட்சியினரை ஆதரிக்கும் மக்களும் இம் முறை ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முதன்மை  வேட்பாளருமான சி. சந்திரகாந்தன்
இடம்பெறவுள்ள பாராளுமன்றத் பொது  தேர்தல்   தேர்தலில் சிறந்த  வேட்பாளர் களுடன்  நாம் களம்  இறங்கி உள்ளோம்  மக்களுக்கு இம்முறை  நல்ல ஒரு தெளிவு இருக்கின்றது  நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை  அடுத்து கிழக்கு மாகாணத் திலும்  அரசியல் மாற்றத்தினை  ஏற்படுத்த வேண்டும்  என்று மக்கள் திட்ட தெளிவாக உள்ளனர்  தமிழரசு கட்சியினரை ஆதரிக்கும் மக்களும் இம் முறை ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர் கிழக்கு மாகாணத்திற்கான ஒரு நிரந்தர தீர்வு வருகின்ற போது அவர்களின் ஆதரவும்  எமக்கு முக்கியம் எனவே

முன்னெடுக்கப்படுகின் ற  தேர்தல்  பிரச்சாரங்களை  மிகக் கவனமாக கையாள வேண்டும் நாங்கள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் இயக்கம் என்ற வகையிலே  மக்களின்  மக்களின்  விடுதலைக்காக  எங்களின்  போராட்ட சாத்தியம் இல்லை என்ற காரணத்தினால் அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள்


அதேவேளை நாட்டை புதிதாக  பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதியும் எமது கொள்கையில் தான் ஆட்சிக்கு வந்துள்ளார்  இருப்பினும் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று எமக்கு தெரியாது,   கடந்த காலங்களை போன்று பெரும்பான்மை மக்களுக்காக திட்டமிட்டு செயல்படுவார்களா அல்லது அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் முன்னெடுக்கப்படுகின்ற  ஒன்றாக நடத்தி செயல்படுவார்களா  என  காலம்தான்  பதில்  சொல்லும்  என   தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முதன்மை வேட்பாளருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்  மட்டக்களப்பில்  இடம்பெற்ற  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றின்  போது  இவ்வாறு  கருத்து தெரிவித்தார்