சுமந்திரனுடைய முடிவுகளை எதிர்ப்பதற்கோ மாற்றியமைப்பதற்கோ தமிழரசுக் கட்சியில் யாருமில்லை- பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம்

 


சுமந்திரனுடைய  முடிவுகளை எதிர்ப்பதற்கோ மாற்றியமைப்பதற்கோ தமிழரசுக் கட்சியில் யாருமில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கப் போகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி வடக்கு கிழக்கு முழுவதிலும் எதிரொலிக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தமிழரசுக் கட்சியினுடைய நிலைப்பாடானது தலைமையில்லாமல் நீதிமன்றம் சென்றது, தலைமைகளுக்குள் முரண்பாடு, தேர்தலுக்காக ஒன்றுபடுவது தேர்தல் முடிவடைந்த பின் விலகுவது என மிக மோசமான கட்டத்தில் இருக்கின்றது.

தமிழ் மக்களுக்கான அரசியல் இருக்க வேண்டும் என்பதை தான் இளைஞர்களும் தமிழ் மக்களும் விரும்புகின்றனர். கே.வி. தவராசா  முன்வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் பெரியளவில் பேசப்படப் போகின்றது.