தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கன மழை நீடித்து வரும் நிலையில், மழைநீர் தேக்கம் காரணமாக, 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில், நேற்று இரவிலிருந்தே தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.