தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனநாயக தமிழரசு கட்சியில் இணைந்து கொள்வாரா ?

 


ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை  சந்தித்துடன் , மாம்பழங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.  இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

 அந்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் வீட்டுக்கு  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று மாம்பழங்களை அன்பளிப்பாக வழங்கி, மாவை சேனாதிராசாவுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ. சரவணபவன் , வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.  இதேவேளை ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் மாம்பழ சின்னத்திலையே தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.