பொது சுகாதார பரிசோதகர்களின் சோதனை நடவடிக்கையின் போது இடையூறு விளைவித்த உணவக உரிமையாளர் கைது .

 


பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

 ஹட்டனில் உள்ள உணவகங்களில் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் அவசர சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

உணவக உரிமையாளர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததோடு, மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரப்படுவதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மத்தியில் தேவையற்ற தொழில்சார் அமைதியின்மையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.