உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ஆம் திகதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரத்த நாள வீக்க (அன்யூரிஸம்) பாதிப்புக்குள்ளான அவருக்கு இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக இருந்ததையடுத்து வாா்டுக்கு மாற்றப்பட்டாா்.
இந்த நிலையில், தற்போது தனது வழக்கமான பணிகளை அவரே மேற்கொள்வதாகவும், வீடு திரும்புவதற்கான உடல் தகுதியுடன் அவா் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று (4) அதிகாலை மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் தனது வீட்டுக்குத் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி நடித்திருக்கும் 'வேட்டையன்' திரைப்படம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.