நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஈபிடிபி கட்சி இன்று தாக்கல் செய்தது.
ஈபிடிபி கட்சியின் சார்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவானந்தராஜா தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதன்போது கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவானந்தராஜா, ஏனைய வேட்பாளர்கள், கட்சியினர் பங்கேற்றிருந்தனர்.