புனரமைக்கப்பட்ட பாடசாலை தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு .

 




 



 

 புனரமைக்கப்பட்டஅமைக்கப்பட்ட பாடசாலை தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு
பட்டிருப்பு வளையத்திற்கு உட்பட்ட வம்மியடியூற்று வாணி வித்யாலயத்தில் அதிபர் திரு தேவகுமார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது

 இந்நிகழ்வில்.   I M H O நிறுவனத்தின் செயல்திட்ட இணைப்பாளர் திரு பிரதீப் காந்த் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் பாடசாலையில் பிரதி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

 
பாடசாலையில் பல வருடங்களாக தள பாட பற்றாக்குறை காணப்பட்டது இது தொடர்பாக சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினருக்கு தெரியப்படுத்தியதன் ஊடாக மாணவர்களின் நலன் கருதி உடனடியாக செயல்பட்ட IMHO நிறுவனத்தினர் ஒரு தொகுதி தளபாடங்களை புனரமைத்து  வழங்கியதுடன் மாணவர் நலன்கருதி இன்னும் பல செயற்திட்டங்களை பாடசாலைக்கு வழங்க முன் வந்துள்ளனர் அந்த வகையில் I M H O நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி ராஜம் அம்மனி அவர்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் பாடசாலைகளின் தேவையறிந்து சேவைகளை செய்து வருவது பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது இச்செயற்றிட்டத்தினை  பொறுப்யேற்று செயற்பட்ட
திரு பிரதீப் காந்த்   அவர்கள் பாடசாலை சமூகம் வெகுவாக பாராட்டியதுடன் IMHO நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளர்  மற்றும் அந்நிறுவனத்தின் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் அதன் அங்கத்தவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிவித்துக் கொண்டனர் தொடர்ந்து தங்களது பாடசாலையோடு இணைந்திருக்கும் படி பாடசாலை அதிபர் வினையமாக கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்து