சுத்தமான இலங்கை என்ற தொனிப்பொருளில் க்ளீன் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்-- ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக



சுத்தமான இலங்கை என்ற தொனிப்பொருளில் க்ளீன் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இதற்கு உதவலாம் எனவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.

இதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவ உள்ளதாக கூறிய அவர் அனைத்து ஆறுகள் , குளங்கள், வீதிகள் , சுத்தமான மலசல கூடம் , சுத்தமான பஸ் தரிப்பு நிலையம், சுத்தமான ரயில் நிலையம் மாத்திரம் அல்ல ஒருவர் மற்றவரை அன்பாய் அரவணைக்கும் பன்புடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்ப உள்ளதாக அவர் கூறினார்.

ஆசியாவின் சுத்தமான நாடாக இலங்கையை மாற்றும் திட்டத்துடன் தாம் பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.