தண்ணீர் போத்தல்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டும்.

 


500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் அழைப்பாளர் சபுமல் குமார இதனைத் தெரிவித்தார்.

இதன்படி தண்ணீர் போத்தல்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.