மட்டக்களப்பு காத்தான்குடி மண்ணின் பெருமையை உலக வரலாற்றில் பதிவு செய்த ஸீனத் பஸ்லி.


 





























சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வை காத்தான்குடியில் முன்னெடுத்தது

மட்/மம/மீரா பாலிகா தேசிய பாடசாலையில்

காத்தான்குடியைச் சேர்ந்த ஸீனத் பஸ்லி 3 நிமிடங்களில் 18 நொடிகளில் 144 பெருக்கல் கணக்குகளை

அபாகஸ் முறை மூலம் தீர்வெழுதி சோழன் உலக சாதனை புரிந்தார் 09 வயதுடைய மாணவி ஸீனத்.

  காத்தான்குடியில் வசித்து வரும் பஸ்லி மற்றும் ஷமீலா தம்பதிகளின் புதல்வி ஸீனத், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் வைத்து 3 நிமிடம் 18 நொடிகளில் 144 பெருக்கல் கணக்குகளுக்கு தீர்வெழுதி உலக சாதனை புரிந்தார்

இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் அமைந்துள்ள மீராபாலிகா தேசிய பாடசாலையில் 2024.10.15 நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமையேற்று நடத்தினார் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் திரு கதிரவன் இன்பராசா அவர்கள் .

முதன்மை விருந்தினர்களாக மீராபாலிகா தேசிய பாடசாலை தலைமை ஆசிரியர் திரு அஷ்ஷெய்க். UL. மன்சூர் மற்றும் அபாகஸ் அமைப்பின் இலங்கை நாட்டின் தலைவர் ரிசார்ட் ரஹிம் பங்கு பற்றி உலக சாதனை புரிந்த சிறுமியை பாராட்டி சிறப்புரையாற்றினார்கள்