மட்டக்களப்பு காத்தான்குடி மாணவி போதைபொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பு வரை துவிச்சக்கர வண்டி பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்

 


போதைப்பொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக காத்தான்குடியிலிருந்து கொழும்பு வரையான துவிச்சக்கர வண்டி பயணத்தை காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா நதா என்ற மாணவி திங்கட்கிழமை (07) காலை ஆரம்பித்துள்ளார்.

போதைபொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்கால சந்ததிகளை போதைவஸ்திலிருந்து  பாதுகாக்கும் வகையிலும் இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்துள்ளார் .

இந்த மாணவியுடன் அவரின் தாய் மற்றும் உறவினர்கள் சிலரும் முச்சக்கர வண்டியில் செல்கின்றதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) அன்று கொழும்பில் பயணத்தை முடிவுறுத்தி திங்கட்கிழமை(14) அன்று ஜனாதிபதி அனுரகுமாரவிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .