முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 


 

போலி ஆவணத்தை சமர்ப்பித்து இலங்கையில் கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் சாட்சி பட்டியலில் மேலும் ஒரு சாட்சியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே உரிய சாட்சிகள் பட்டியலில் திருத்தம் செய்ய அனுமதி அனுமதி வழங்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, உரிய சாட்சிப் பட்டியலில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தார்.

பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ஷானக ரணசிங்க கருத்துரைக்கும் போது, இந்த வழக்கில் காட்சிப் பொருளாகப் பெயரிடப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவரின் பிறப்புச் சான்றிதலை விசாரணை தொடங்குவதற்கு முன் ஆய்வு செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த கோப்பு  ஒருவார காலத்திற்குள் ஆராயப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர், மேற்படி வழக்கு விசாரணைகளை நவம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.