இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு. சம்பந்தப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பை விரைவாக உறுதிசெய்ய நாங்கள் செயற்பட்டோம். அதுமட்டுமின்றி, புலனாய்வு பிரிவின் தகவலின் பேரில் விரைவாகச் செயல்பட்டு, சந்தேகத்திற்குரிய சிலரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்தோம். இலங்கையில் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் நாங்கள் தற்போது உறுதி செய்துள்ளோம்" என்றார்.