இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கை வருகிறார்

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி


எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் விஜயமாக இலங்கை வருகின்ற அவருடன், இந்தியாவின் முக்கிய உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றும் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.