காட்டு யானைகளின் தாக்குதலால் இந்த ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

 


இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் காட்டு யானைகள் இறப்பதும், காட்டு யானைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் 8 மாதங்களில் 340 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இவ்வருடம் இதே காலப்பகுதியில் 239 காட்டு யானைகள் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் எட்டு மாதங்களில் காட்டு யானைகளின் தாக்குதலால் 117 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 90 ஆக குறைந்துள்ளது.

யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.