அரசாங்கத்துக்கு அறுபத்து நான்கு இலட்சம் ரூபாய்க்கும் (6443716.71) வரி செலுத்த தவறிய குற்றச்சாட்டின் பேரில், நிறுவனமொன்றின் பணிப்பாளர் ஒருவருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஆறு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, நேற்று (24) உத்தரவிட்டது.
அத்துடன், செலுத்த வேண்டிய வரித் தொகையை 24 சம தவணைகளில் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
ஏஎம் ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்டின் பிரதான பங்காளியான டி.குணவர்தனவுக்கே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வரிப்பணத்தை செலுத்த தவறினால், மேலதிகமாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும், மாவட்ட நீதவான் உத்தரவிட்டார்.(