கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் இன்று பிரிந்த நிலையிலே சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்- சோமசுந்தரம் கணேசமூர்த்தி

 

  வரதன்

 

 

 

 

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இருந்து தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் இன்று பிரிந்த நிலையிலே சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர் இவர்கள் தனிப்பட்ட சுயநலத்திற்காகவே இவ்வாறு செயல்படுகின்றார்கள்- ஜக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் கட்சியின் முதன்மை வேட்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி

இடம்பெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான சுயேச்சை குழுக்கள் களத்தில் இறங்கியுள்ளதால் இம்முறை அதிக அளவிலான வாக்குகள் பிரிவடைவதனால் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை நிச்சயமாக அதிகமான வாக்குகள் பிரிவடைவதனால் இம்முறை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குகளும் இம்முறை பிரிவடைய வாய்ப்புள்ளது இதனால் இம்முறை கட்சிகளின் ஆசனம் கூடி குறைவடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது


தமிழர்களது அரசியல் பின்னணியில் முக்கியமான கட்சிகளில் ஒன்றான தமிழரசு கட்சியினால் தமிழர்கள் தற்போது பின்னடைவை எதிர்நோக்கி யுள்ளனர் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இருந்து தேர்தலில் வெற்றி பெற்ற இதர கட்சிகள் இன்று பிரிந்த நிலையிலே சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்


தமிழர்களின் உரிமைக்காக ஒன்றாக போராடியவர்கள் என்று கூறுகின்றவ ர்கள் இவர்கள் தனிப்பட்ட சுயநலத்திற்காகவே இவ்வாறு செயல்படுகின்றார்கள் என


ஜக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் கட்சியின் முதன்மை வேட்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்