பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 


ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்கள் ஒன்று கூடி  ஆர்ப்பாட்டம் ஒன்றை  (25) முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபர் பாலியல் சேட்டையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் ஒழுக்கம் பாதிக்கபடுவதாக எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த அதிபர் குறித்து பலமுறை ஹட்டன் கல்வி வலயத்திற்கு முறைப்பாடுகளை பெற்றோர்கள் முன்வைத்த போதும் ஹட்டன் வலய கல்வி பணிமனை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பெற்றோர்கள பெற்றோர்களால்  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக ஹட்டன் வலைய கல்வி பணிமனையின் பணிப்பாளர் மற்றும் உதவி கல்வி பணிப்பாளர் ஆகிய குழுவொன்று சம்பவம் இடம்பெற்ற பாடசாலைக்கு விரைந்தனர்.

பெற்றோர்களின் முறைப்பாட்டிற்கு அமைய இன்றைய தினம் டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்திற்கு வருகை தந்த ஹட்டன் வலைய கல்வி பணிப்பாளர் ஆர்.விஜேந்திரன் தெரிவிக்கையில்,

 பெற்றோர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த பாடசாலையின் அதிபர் இராமகிருஷணன் என்பவரை ஹட்டன் வலய கல்வி பணிமனை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிமனை பணிப்பாளர் ஆர். விஜேந்திரன் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார் தமக்கு முறைபாடு கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அறிவித்த பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.