மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது.

 


நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள விடுதியொன்றில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று (08) செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது.

நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நுவரெலியா மாவட்ட  நீதவான் நீதிமன்றின் அனுமதிக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே குறித்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது ஐந்து  பெண்கள் உட்பட ஹோட்டல் உரிமையாளர் அடங்களாக 6 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த விடுதிக்கு பொலிஸார் ஒருவரை சிவில் உடையில் அனுப்பி உரிமையாளரிடம் பெண்களைப் பற்றி விசாரித்து ஒரு பெண்ணை தெரிவு செய்து பணம் செலுத்திய பின்னர் தாம் பொலிஸார் என அடையாளம் காட்டிய பின்னர் குறித்த கைது  நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் வெலிமடை, மொனராகலை, கொழும்பு, அநுராதபுரம் மற்றும் மாத்தளை போன்ற  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார், அவர்கள் அனைவரும் 32 தொடக்கம் 47 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் எனவும் தெரிவித்தனர் .

கைது செய்யப்பட்ட 6 பேரையும் தடுத்து வைக்கப்பட்டு தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் அஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.