திருகோணமலை - சீனக்குடா பகுதியில் நேற்று (11) பிற்பகல் ரயில் மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு ரயில் பாதையை கடக்கும் போதே இந்த விபத்து இடம்பொற்றுல்லதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.