மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் அமைய பெற்ற முதலாவது டென்னிஸ் மைதானம் சிவானந்த தேசிய பாடசாலையில் திறந்துவைக்கப்பட்டது.

 






































FREELANCER



கால்கோள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு KOV நம்பிக்கை நிதியம் மற்றும் TKS நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலையில் பாடசாலை மட்டத்தில் அமைய பெற்ற முதலாவது Tennis மைதானம் (2024.10.17) மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த தேசிய பாடசாலை வளாகத்தில் கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்த ஜி மஹராஜ் அவர்களினால் மங்கல வேளையில் திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் S. தயாபரன் நிகழ்வுக்கு தலைமை தாங்கியதோடு . வாசுதேவன்( பிரதேச செயலாளர் மண்முனை வடக்கு )பழைய மாணவர் சங்கத் தலைவர் , மற்றும் T. குணராஜா செயலாளர் பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவர் ஆகியோரும் இணைத்தலைமை வகித்தனர் .

மேலும் நிதி அனுசரணையாளர்கள், பாடசாலை அதிபர், முன்னாள் அதிபர் , உப அதிபர்கள், பழைய மாணவர் சங்க தலைவர், ஏனைய நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அதே போன்று மாணவர் சங்க உட்கட்டுமான செயலாளர் மற்றும் உட்கட்டுமான நிலையியல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் இதனை வெற்றிகரமாக முடிக்க முன்னின்று உழைத்தது குறிப்பிடத்தக்கது .