வரதன்
இடம்பெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளினால் தொடர்ச்சியாக தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்காக தேர்தல் அலுவலகங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது,
இதே வேளை தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி தேர்தல் அலுவலகத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முறக்கொட்டான் சேனையில் நேற்று மாலை இடம் பெற்றது தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ். மேவின் தலைமையில் இடம்பெற்றது
நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட நிதித்துறை மன்றத்தின் தேசிய குழு உறுப்பினர் கானா திலீப் குமார் கலந்துகொண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகளை இங்கு முன் எடுத்தார் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
கடந்த கால அரசாங்கத்தில் முன்னெடுத்தவர்களின் தேவைக்காக மக்களிடம் அதிகமான வரிப்பணங்கள் அறவிடப்பட்டது பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர் இருப்பினும் இவர்கள் அரசியல் செய்வது தேர்தல் காலங்களில் மாத்திரம் தான் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் கலாச்சார ங்களை தான் இவர்கள் கடந்த காலத்தில் முன்னெடுத்து வந்தனர் இவர்கள் தேர்தல் பணிகளை முன்னெடுத்து பின்பு இவர்களை சந்திப்பது என்றால் ஐந்து வருடங்களின் பின் தான் பொதுமக்களிடம் மீண்டும் வருவார்கள்
நமது கட்சி அவ்வாறாக தேர்தல் அரசியல்களுக்காக முன்னெடுப்பதில்லை நாம் மக்களுக்காக சமூக அரசியலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருபவர்கள் நாம் தேர்தல் அரசியலுக்காக மட்டும் மக்களுடன் இணைந்து பயணிப்பதில்லை என்றும் அவர்களுடன் தான் இருக்கின்றோம்
இடம்பெற உள்ள இந்த பாராளுமன்ற தேர்தல் ஆனது மிகவும் முக்கியமானது பலரது அரசியல் வாழ்வுக்கு ஓய்வினை அளித்துள்ள தேர்தல் மக்கள் சிந்தித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் கல்குடா தொகுதி வேட்பாளரான கா. திலிப் குமார் மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்